Wednesday 19 June 2013

தொடர்கதை முடிவுக்கு முன்!!





    “போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம்.  
    இந்தத் தொடர்கதை மணிமேகலை பிரசுரத்தில் 2008 ம் ஆண்டிலேயே நாவலாக வெளிவந்து விட்டது. நான் இக்கதையை ஒரு பிரபல வார பத்திரிக்கைக்குத் தான் எழுதிக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், தொடர் மிகவும் நீண்டு இருப்பதால் சற்று சுறுக்கிக் கொடுக்கச் சொன்னார்கள்.
   எழுதியதைச் சுறுக்குவதைவிட புதியதாகவே வேறு ஒன்றை எழுதிக் கொடுக்கலாம் என்று நான் நினைத்தால் அதனை நாவலாகவே வெளியிட்டு விட்டேன்.
   இந்த நாவல் பலராலும் பாராட்டப் பட்டாலும் என்னிடத்தில் இரண்டு பிரதிகளே இருந்தது. இதை இரண்டாம் பதிப்பாக வெளியிட நான் விரும்பினாலும் பல காரணங்களால் முடியவில்லை.
  அதனால் இந்த நாவலை என் கணிணியில் சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இதைத் தொடராக பதித்தேன்.
   ஏற்கனவே எழுதப்பட்ட நாவல் என்பதால் படித்தவர்களின் கருத்துக்குப் பதில் கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.
   இந்தத் தொடர் வரும் 60 ம் பதிவுடன் நிறைவடைகிறது. இதுவரை வந்து படித்துக் கருத்திட்டு ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
   தவிர, கவிமனத்தைத் தேடி அவ்வளவாக யாரும் வருவது கிடையாது. அதனால் என் அடுத்த தொடர்கதையான “மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து“ வை என் வலைப்பூ “அருணா செல்வம்“   http://arouna-selvame.blogspot.com -த்தில் தொடராக வெளியிட உள்ளேன்.
   இந்த நாவல் எனக்கு நிறைய இரசிகர்களையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்த நாவல். எனது முதல் நாவல்! இவ்வளவு நீண்ட கதை இல்லை. மிகவும் சுறுக்கமாகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததாக படித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
    இது கிராம சூழலில் பின்னப்பட்ட ஒரு விதவை பெண்ணைப் பற்றிய கதை. நிச்சயம் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டும் வகையில் கதை இருக்கும்.
   இந்த நாவலையும் தொடர்ந்து படித்து என்னை ஊக்குவிக்க  வேண்டுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

1 comment :

  1. தங்களது எழுத்துக்கள் தங்களை எழுத்தாளராக பறைச்சாற்றினாலும், பொழுதுபோக்குவதற்காக வலைப்பூவில் பதியும் என்னை போன்றவர் என்றே எண்ணியிருந்தேன்...

    ஒரு எழுத்தாளரின் தோழமை கிடைத்ததில் பெரும் ஆனந்தமடைகிறேன்...

    மேலும் எழுதுங்கள்...

    ReplyDelete